2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘வரட்சி காரணமாக 35,000 குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை’

ஆ.ரமேஸ்   / 2019 மார்ச் 18 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வரட்சி காரணமாக, ஹட்டன் - டிக்கோயா பகுதியிலுள்ள சுமார் 35 ஆயிரம் மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.  

இந்நிலையில், ஹட்டன் - டிக்கோயா நகரசபையும் ஹட்டன் நீர் வழங்கல் அதிகாரசபையும் ஒன்றிணைந்து, மக்களது குடிநீர்த் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பதற்கு அக்கறையுடன் செயற்படுவதில்லை என, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் அழகமுத்து நந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக, நேற்று (17) கருத்துத் தெரிவித்த அவர்,

ஹட்டன் நீர் வழங்கல் அதிகாரசபைக்கு பணம் செலுத்தி குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு, மழைக்காலங்களில் வழங்கப்படும் குடிநீர், வெயில் காலங்களில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.  

வரட்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில், மூன்று நாளைக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட தினத்தில் குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று மக்கள் தெரிவிப்பதாகவும் ஐந்து நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.  

எனவே, மக்களின் பிரச்சினைகளை அறிந்து, ஒழுங்கான முறையில் குடிநீரைப் பெற்றுக்கொடுக்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .