2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரட்சியால் பயிர்ச்செய்கைப் பாதிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையகத்தில் வரட்சியான வானிலை நீடித்து வருவதால், மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகள், மக்கறிகளுக்கு நீர் பாய்ச்சுவதும் பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மரக்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளமையால், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வரட்சியால், நீர் நிலைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுவதால் நீர் நிலைகள் வற்றிவருவதாகவும், டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சிகளில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .