2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘வரட்டுக் கௌரவத்தை விட்டுச் செயற்படவும்’

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி அதனை முடிவுறுத்துவதன் மூலமே தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க முடியுமெனத் தெரிவித்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன ஏற்றுக்கொண்டு, வரட்டுக் கௌரவத்தை விட்டுச் செயற்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

எமது சக்திக்கு உட்பட்டு, கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். எமது விசேட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூட்டு ஒப்பந்தத்தங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தோம் என்றார்.

2016 கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சட்டத்துக்கு முரணான விடயங்களை அம்பலப்படுத்துவதே எமது நோக்கமாகுமெனத் தெரிவித்துள்ள அவர், அந்த நோக்கம் ஓரளவேனும் நிறைவேறியுள்ளது என்ற திருப்தி எமக்கு இருக்கிறது என்றார்.

“2016ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்த்திலிருந்து வெளியேறி அதனை முடிவுறுத்துவதன் மூலமே தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வழி ஏற்படும் என்பது, நீதிமன்ற கட்டளையில் இருந்து வெளிப்படும் விடயமாகும்” என்றார்.

“எமது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்தை சட்ட ரீதியானது என ஏற்று கொண்டுள்ளது என தவறாக கருதக்கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் மூன்றாம் தரப்பாக உள்ள எங்களால், பொது மக்கள் அக்கறை என்ற வகையிலும் கேள்விக்குட்டுத்த முடியாது என்பதே சட்ட ரீதியான தன்மையின் அடிப்படையிலான நீதிமன்றத்தின் முடிவாகும்.
இதிலிருந்து எந்தவொரு கூட்டு ஒப்பந்தத்தையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்த அவர், இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் ஏற்புடையதாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினூடாக எமது நீதிமன்ற நடவடிக்கை நிறைவுக்கு வந்துவிட்டாலும் நாம் வேறு நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X