2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’வரலாற்றைப் பாதுகாக்க கண்டியில் பல திட்டங்கள்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதான நகரமாக, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, கண்டி நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மிகப் பெரிய நீர் வினியோகத்திட்டமான, கண்டி - வடக்கு மட்டும் பாத்ததும்பறை நீர் விநியோகத்திட்டத்துக்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் (21), இடம்பெற்றது.

கண்டி மாவட்டத்தின் சுமார் 5 இலட்சம் பேருக்கு குடி  நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக, 51 பில்லியன் ரூபாய் செலவில், இந்த நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்ற பின்னர், 50 மில்லியன் ரூபாய் செலவில், பூஜாபிட்டிய நகரில் நிர்மாணிக்கப்பட்ட  புதிய தபாலகத்தை திறந்து வைத்த பின்னர், கருத்துத் தெரிவிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டியின் அதிவே நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட பின்னர், கண்டி பாரிய அளவில் வளர்ச்சியடையும் என்றும் கண்டி, கொழும்பு, ஹம்பந்தோட்டை ஆகிய மூன்று நகரங்களையும் இணைத்து, ஒரு அபிவிருத்தி மய்யமும் அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

பேராதெனிய பிரதேசத்தில், மும்மொழி மத்திய கல்லூரியொன்றை அமைக்கவுள்ளதாகவும் புரதான இராச்சியத்தின் தலைநகரமான கண்டி நகரின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கு, கண்டி பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .