2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரி விதிப்பில் மாற்றம்?

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்குச் செலுத்தும் வரி, மிகக் குறைந்தளவிலேயே இருப்பதால், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, அதை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் இராஜமணி பிரசாத் அறிவுறுத்தியுள்ளார். 

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். 

தொடர்ந்துரைத்த அவர், சில பெருந்தோட்டக் கம்பனிகள், தேயிலைச் செடிகளைப் பராமரிப்பதற்காக, அவற்றைத் தொழிலாளர்களுக்கு உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன என்றும் அவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள தேயிலைச் செடிகளடங்கிய பரப்புக்கு, கம்பனிகளால் வசூலிக்கப்படும் வரி, கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட, இரண்டு மடங்குகளாக உள்ளனவெனத் தெரிவித்த அவர்,  இவ்விடயம் தொடர்பில் கவனஞ் செலுத்த வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.  

பெருந்தோட்ட நிறுவனங்கள், பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதி, அதற்குச் செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுவதோடு, அவை உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய முறையான பேணப்படாமலிருப்பது தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதனால், பெருந்தோட்டங்கள், பிரதேச சபைகளுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை மறுபரிசீலனை செய்து, முறையான வரி வசூலிப்யை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 

எதிர்காலத்தில், தோட்டக் கம்பனிகள் மூலம் அறவிடப்படும் நிதியையும் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .