2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருடாந்த விஞ்ஞான போட்டி

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் 2இல் இயங்கும் விஞ்ஞான ஆசிரியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞானப் போட்டி, நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2 இலுள்ள 22 பரீட்சை நிலையங்களில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், தரம் 6 இலிருந்து 11 வரையான வகுப்புகளைச் சேரந்த 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ளனரென்று, விஞ்ஞான ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் புருஷோத்தமன் கூறினார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், தூய கணிதம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25 வரை, நுவரெலியா கோட்டம் 2 இலுள்ள 3 நிலையங்களில் நடைபெறுமென்றும் அவர் கூறினார்.

போட்டிப் பரீட்சையில், அதிக புள்ளிகளைப் பெறும் முதல் மூவருக்கு, சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும் அதேவேளை, முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், முதலிடங்கள் பெறும் பாடசாலைகளும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன.

மாணவர்களிடையே கணித/ விஞ்ஞான பாட அறிவை விருத்தி செய்யும் முகமாக, விஞ்ஞான ஆசிரியர் ஒன்றியம், கடந்த 10 வருடங்களாக இந்தப் போட்டியை நடத்தி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .