2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரை

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் அமைந்திருந்த பலகைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வர்த்தக நிலையமொன்று இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

எனினும், பிரதேசவாசிகளும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தீயினால் 5 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன், தீயை வைக்க வந்தவர்கள் வர்த்தக நிலையத்திலிருந்த பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1 மணியளவில், குறித்த வர்த்தக நிலையத்துக்குள் புகுந்த அடையாளம் ​தெரியாத சிலர், இந்த வர்த்தக நிலையத்துக்கு தீ வைத்துள்ளமை அங்கு பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், இவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்​னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .