2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வோல்ட்ரீம் தோட்டத்தில் 24 வீடுகள் தாழிறங்கும் அபாயம்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்டத்திலுள்ள 24 வீடுகள், நிலச்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளமையால், இந்த வீடுகளில் வசிப்போர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த வீடுகள் அனைத்தும், 1993ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது நிலச்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என, வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக, மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டது என்றும் இதனால், 15 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, 21 வீடுகள் தற்போது மண்சரிவு அச்சுறுத்தலில் உள்ளது என்றும் இந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மூலம், இந்த வீடுகளில் இருந்து வெளியேறுமாறு, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதமே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் இந்த இடமாற்றம் இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .