2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’வளர்க்கப்படும் யானைகளுக்கு ஆயுள்காலம் அதிகம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நதீக் தயா பண்டார

காடுகளில் வாழும் யானைகளை விட, வளர்க்கப்படும் யானைகளின்  ஆயுள்காலம் அதிகரித்துக் காணப்படுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்தியர், தரிந்து விஜேகோன் தெரிவித்துள்ளார்.

காடுகளில் வாழும் யானைகளின் ஆயுள்காலம் 65- 70 வருடங்களாகக் காணப்படுவதாகவும் மனிதர்களின் கட்டுபாட்டின் கீழ் வாழும் யானைகளின் ஆயுள்காலம் 80- 85 வருடங்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க கண்டி- எசல பெரஹெராவில் கலந்துகொள்ளும் யானைகள், பெரஹெரவில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் இறுதி ரந்தோலி பெரஹெராவுக்கு முன்னதாகவும் யானைகள் பரிசோதிக்கப்பட்டு, யானைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்காகச் சிகிச்சையளிப்பது வழமையாக இடம்பெறும் செயலென்று, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காடுகளில் வசிக்கும் யானைகள், தமக்கான உணவுகளைத் தேடிக்கொள்வதில் சவாலை எதிர்நோக்கும் அதேவேளை, மனிதர்களின் கட்டுபாட்டின் கீழ் வளர்க்கப்படும் யானைகளுக்கான உணவுகள் இலகுவாகக் கிடைக்கின்றன என்று  அவர் இதன்போது கூறினார்.

மேலும், வளர்க்கப்படும் யானைகள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பமும் மிகவும் குறைவென்றும் யானைகளின் உரிமையாளர்களால் யானைகளுக்கு தேசிய, மேல்நாட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதால், இவ்வாறான யானைகள் நோய்வாய்ப்படுவது அரிதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .