2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வேவண்டன் தோட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

பா.திருஞானம்   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கொத்மலை - தவலந்தன்னை, வேவண்டன் தோட்டத்தில், மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டுத்திட்டம் இன்னும் பூர்த்தி​டையவில்​லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 10 வருடங்களாக மண்சரிவு எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் நிலையில், எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில், சொந்த வீடுகளில் இருந்து வெளியே பாடசாலைகளில் தங்குவதும் பின்னர் மீண்டும் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதுமாக, பிரதேசத்தில் உள்ள 58 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு, மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த பழனி திகாம்பரத்தால், 20 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றும் 38 வீடுகளைக் கொண்ட திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது 20 வீடுகளைக் கொண்ட திட்டத்தில் 17 வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளதுடன், 38 வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் செல்லும் பாதை, கொங்கிரீட் போடப்பட்டு, பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த வீட்டுத்திட்டத்தை உடனடியாக பூர்த்தி செய்து, பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்துவரும் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .