2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாசனைத் திரவியமான ’வெனிலா’ ஜப்பானுக்கு ஏற்றுமதி

மொஹொமட் ஆஸிக்   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு, முதன் முதலாக வாசனைத் திரவியமான 'வெனிலா' ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம்  கண்டி, வத்துகாமம் ரஹஸ்எல்ல ஹோட்டலில், கடந்தவாரம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கமும் மற்றும் ஜப்பான் நாட்டின் நிறுவனமான 'பூஜியாமா' நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  

கடந்த 25 வருடங்களாக, வெனிலா உற்பத்தித்துறையை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வந்த வெனிலா உற்பத்தியாளர் சங்கத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான முத்துபண்டார மடுகல்ல,  இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் வனிபத் துறை அமைச்சின் செயலாளர் திருமதி குமுது கருணாரத்ன, விவசாயத் திணைக்களத்தின் ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கெந்த, மத்திய வங்கியின் மாத்தளைப் பிராந்திய காரியாலயத்தின் முகாமையாளர் வினீதா ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .