2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விஜேசிறி எம்.பிக்கு பிணை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டார​வளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீதுத் தாக்குதல் நடத்தினாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சரீரப்பிணையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸில் சரணடையாது இருந்த அவ​ரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (13) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதையடுத்தே, அவரை, 5 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் வாகனத்தை நிறுத்தி வைத்தமை தொடர்பாக ஏற்பட்ட முறுகலையடுத்தே, அடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்திருந்தது.

எனினும் அவர் கைது செய்யப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று அவர் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .