2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வியாபாரியின் அச்சுறுத்தலுக்குப் பயந்து கையை வெட்டிக்கொண்ட மாணவி

Editorial   / 2018 மே 23 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

வியாபார நிலையத்திலிருந்த காணாமற்போன அலைபேசியை, தான் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானதென்பதை நிரூபிப்பதற்காக, 13 வயது மாணவியொருவர், தன்னுடைய கையை வெட்டிக்கொண்ட சம்பவமொன்று, பதுளையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்படையவர் என்று சந்தேகிக்கப்படும் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாள​ரை, பொலிஸார் நேற்று (23) கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,

தன்னுடைய சக மாணவிகளின் அழைப்பின் பேரில், விளையாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, குறித்த வியாபார நிலையத்துக்கு, மாணவி சென்றுள்ளார்.

இதன்போது, மாணவி தான் கொள்வனவு செய்த விளையாட்டுப் பொருளுக்கான பணத்தைச் செலுத்துவதற்காக, வியாபாரி இருந்த இடத்துக்குச் சென்றபோது, குறித்த வியாபாரி, மாணவியை இழுத்துச் சென்று, ஒரு நாற்காலியில் அமர வைத்து, கயிறொன்றினால் மாணவியைக் கட்டியுள்ளார். தன்னுடைய கடையில் அலைபேசியொன்று காணாமல் போய்விட்டதாகவும் அதை அம்மாணவி திருடிவிட்டதாகவும், மாணவி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எனினும், வியாபாரியின் குற்றச்சாட்டை மாணவி மறுத்ததால், தான் திருடவில்லை என்பதை நிரூபிப்பதற்கு, கையை வெட்டிக்கொள்ளுமாறு, விபாயாரி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, மாணவி தனது கையை, கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, மாணவி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, குறித்த வியாபாரியை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .