2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘விவரங்களைத் திரட்ட படிவம் வரும்’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன் 

ஹட்டன் நகரில் வசிப்போர், புதிதாக வருகை தருவோர், வாடகை வீடுகளில் குடியிருப்போர் பற்றிய விவரங்களைத் திரட்டுவதற்காக, கிராம சேவகர்களூடாக விரைவில் படிவங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தெரிவித்தார். 

ஹட்டன் நகரின் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக, நகர வர்த்தகர்ளுக்கு அறிவித்தல் வழங்கும் கூட்டம், நடைபெற்றபோதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில், ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு என்றுக் கூறியதோடு, நகர வர்த்தகர்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும நகரத்துக்குப் புதிதாக வருபவர்கள், சந்தேகத்துக்கிடமான மு​ைறயில்  நடமாடுபவர்கள், அவ்வாறான வாகனங்கள் தொடர்பாக, பொலிஸாருக்கு, எந்தவித தயக்கமும் இன்றி அறிவிக்குமாறு கோரினார். 

இந்நிலையிலேயே, நகரில் குடியிருப்போர், வாடகைக்குக் குடியிருப்போர், வேறு இடங்களில் இருந்து வந்து தொழில் புரிவோர், வர்த்தக நிலையங்களில் தங்கியுள்ளோர் முதலான விவரங்களைத் திரட்டுவதற்காக, கிராம உத்தியோகத்தரினூடாக, படிவங்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்றும் அவற்றைச் சரியான முறையில் நிரப்பி, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அதன்  ஒரு பிரதியை, குடியிருப்பாளர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .