2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விவாதப்போட்டி

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

உள்ளூராட்சி மன்றங்கள் முறையாக இயங்குகின்றனவா, இல்லையா என்ற தலைப்பிலான விவாதப்போட்டி, நோர்வூட் பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில், இன்று (1) காலை நடைபெற்றது.

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல்  தலைமையில் நடைபெற்ற  விவாதப் போட்டியின் இறுதிப் போட்டியில், பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்தியக் கல்லூரியின் மாணவர்களும் நோர்வூட் தமிழ்மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, உள்ளூராட்சிமன்றங்கள் முறையாக இயங்குகின்றன  என்றத் தலைப்பில் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் மாணவர்களும் உள்ளூராட்சி மன்றங்கள் முறையாக இயங்கவில்லையென்றத் தலைப்பில் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களும் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போட்டியில், சென்மேரீஸ் மத்திய கல்லாரி முதலாம் இடத்தையும் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X