2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளும் பங்குதாரர்களாக வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

 

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் பணியாளர்களுக்குப் பங்களிப்பை வழங்கி, பயனாளர்களும் வீடமைப்புத் திட்டத்தின் பங்காளிகாக வேண்டும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

   நுவரெலியா- மடக்கும்புரைப் பகுதியில், புதுக்காடு, வடக்கிமலை, கீழ்க்கணக்கு ஆகிய தோட்டங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்துரையாற்றிய அவர், இந்திய வம்சாவளித் தமிழர்கள், நாடளாவிய ரீதியில் பரந்துபட்டு வாழ்ந்தாலும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையகத் தமிழர்கள், இந்தியக் கலை, கலாசார விழுமியங்களைக் காத்துக் கடைபிடித்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைக்கிறேன் என்றார். 

இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டம் முன்மாதிரித் திட்டமாகவும் பாரிய ஒரு திட்டமாகவும் காணப்படுகின்றது என்றும் இந்த வீட்டமைப்புத் திட்டத்தை, பயனாளிகள் வீடு என்பதை விட இல்லம் என்று எண்ணி, வீடமைப்புத் திட்டப் பணியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு, சிறந்த இல்லத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .