2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’வீதி அபிவிருத்தியின்மையால் ஐ.தே.கவின் வாக்குவங்கி சரியும்’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையால், எதிர்வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நேற்று (11), அம்பகமுவ கேட்போர் கூட மண்டபத்தில், நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் பல இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்த​போதிலும், இன்னும் திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதென்றும் அவர் கூறினார்.  

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளதென, மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாற்றான்தாய் மனப்பாங்குடனேயே செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.  

இது, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில், ஐ.தே.கவின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X