2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜனவரி 20 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி சந்ரு

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து இராதலை வழியாக ஐந்து தோட்டப் பகுதிகளுக்கு செல்லும் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, அக்பகுதி மக்கள் ​இன்று, எதிர்ப்பு பேரணி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது, 400க்கும் மேற்பட்டோர் விதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு, பேரணி ஒன்றையும் நடத்தினர்.

“நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரதாலை சந்தியிலிருந்து இப்பொலிஸ் பிரதேசத்தில் காணப்படும் மட்டுக்கலை தோட்ட இரு பிரிவுகள், கிலைண்டன், சென்கூம்ஸ் கீழ் பிரிவு மற்றும் மேல் பிரிவு ஆகிய 5 தோட்டப் பகுதிகளுக்கு நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து பயணிக்க இலகுவான சுமார் 2 கிலோமீற்றர் வரையான பிரதான வீதி  காணப்படுகின்றது.

“இந்த வீதி கடந்த பல வருடகாலமாக சீர்த்திருத்தப்படாமல் குன்றும் குழியுமாகிய நிலையில் மக்கள் பாவணைக்கு உதவாமல் காணப்படுகின்றது.

“இது தொடர்பில், அரசியல்வாதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தோட்ட கம்பியை நிர்வாகங்கள் என பலரிடமும் பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டும் வீதியின் அவலநிலை மேலும் தொடர்ந்துள்ளதே தவிர, புனரமைக்கப்படவில்லை.

“இந்த நிலையில் கடந்த பொது தேர்தலின் போதும் கூட பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நுவரெலியா  மாவட்ட மக்களை பிரதநிதித்துவப் படுத்தும் பிரபல கட்சி ஒன்றின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முன்வந்து  இவ்வீதியை செப்பனிட கல், மணல் என கொண்டு வந்து குவித்துள்ளார்.

“ஆனால், ஆட்சி மாற்றம் மற்றும் பிரதேசவாசிகளின் உள்ளக கட்சி பிரச்சினையால் காலப்போக்கில் கொண்டு வந்து கொட்டிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது” என ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .