2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வீதியைப் புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ, எம். கிருஸ்ணா

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கெம்பியன் முதல்  லொயினோன் மற்றும் ராணிகாடு வரையிலான பாதையை புனரமைத்துத் தரக்கோரி இன்று (30) பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக,  பொகவந்தலாவை- ராணி காடு கெம்பியன் ,பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து, இரண்டு மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டது. 

தோட்ட பொது மக்கள், பயணிகள், பஸ் உரிமையாளர்கள், ஓட்டோ சாரதிகள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் டயர்களை எரித்தும், பதாதைகளை  ஏந்தியும் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட குறித்த வீதி  நீண்ட காலமாக புனரமைக்கப் படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதால், போக்குவரத்தை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 

சுமார் 8 கிலோ மீட்டர்தூரம் வரையிலான குறித்த வீதியைப்  புனரமைத்துத் தருவதாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வாக்குறுதியளித்த  போதிலும், இதுவரையில் கண்டுகொள்ள வில்லை என்றும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இன்று பகல் 12 மணிமுதல் 2.30.மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், விரைவில் உரிய தரப்பினர் இவ்வீதியை புனரமைத்து தராவிட்டால், பாரிய வீதி மறியல் போராட்டமொன்றை மீண்டும் முன்னெடுப்பதாக கூறி ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.   

இதேவேளை, வீதி புனரமைக்கப்படாததால், குறித்த வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த, ஹட்டன்- டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X