2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டயகம மக்களுக்கு தனி வீடுகள்

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம மூன்றாம் பிரிவு இலக்கத் தோட்டத்தில், வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான லயன் குடியிருப்புகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர், விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிக மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கால்வாய் நிரம்பி குடியருப்புகளில் நீர் புகுந்தமையால், பத்து குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது சமையலறை உபகரணங்களை இழந்துள்ளனர் எனவும் அவர், அந்த அறி​க்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும், குறித்த சமையல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொண்டு, கால்வாயை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்தை இடைக்கால நடவடிக்கையாகத் தான் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக, பழமைவாய்ந்த அந்த குடியிருப்பில் வாழும் மக்களுக்கு, தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான வேண்டுகோளை, மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .