2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

இளைஞர் யுவதிகள் பலருக்கு, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 17 இலட்சத்து, அறுபதாயிரம் ரூபாவை, மோசடி செய்த இளைஞரை, மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளைப் பகுதியின் ரிதிபான என்ற இடத்தில் மறைந்திருந்த இளைஞனே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

படல்கும்பரையைச் சேர்ந்த நதிகா, மங்களிகா உள்ளிட்ட நால்வர், படல்கும்புரை மற்றும் மொனராகலை பொலிஸ் நிலையங்களில் செய்த புகாரையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பொலிஸார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர், 30 இளைஞர், யுவதிகளிடம் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, 25 ஆயிரம் முதல் ஒரு இலட்ச ரூபாய் வரையில் பணத்தைப் பெற்று, மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் அரச திணைக்களங்களில் தொழில் பெற்றுத் தருவதாகவே இம் மோசடி இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .