2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் அவதி

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால்சாந்த உதய

 

ஹம்பகமுவ வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர், கொலொன்ன வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரு வைத்தியசாலையின் வைத்தியர்களும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஹம்பகமுவ வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர், கொலொன்ன வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்தியர் இடமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலன்ன வைத்தியசாலைக்கு புதியவர் ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே, இரு  வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சின் தீர்மானத்துக்கு அமைவாகவே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொலன்ன வைத்தியசாலைக்கு நேற்று (7) காலை அவரசர நிலையில் சிறுமி ஒருவர் அழைத்துவரப்பட்டார் என்றும் எனினும் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால், அச்சிறுமி அம்பியுலன்ஸ் வண்டியினூடாக எம்பிலிபிட்டிய ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் எனவே இது தொடர்பில் அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .