2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீபாத மாறாது

Editorial   / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிவனொளிபாதமலையின் (ஸ்ரீபாத) புனித உரிமையை வேறு மாவட்டத்துக்கு வழங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

“எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது, “சிவனொளிபாத மலையின் (ஸ்ரீபாத) புனித உரிமை, நுவரெலியா மாவட்டத்துக்கு உரித்துடையதாக்கப்படும் என சிலர் கூறுகின்றனர். அந்தக் கூற்றுகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சின் காரியாலத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்​திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

ஸ்ரீபாத புனித பூமி மற்றும் வனாந்தரம் ஆகியன இரத்தினபுரி மாவட்டத்துக்கு உரித்துடையவை. அந்த உரித்துடைமையில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படமாட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பகமுவ பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி, அம்பகமுவ பிரதேசசபையின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எலபிரிய நந்தராஜ் உயர்நீதிமன்றில் நேற்று முன்தினம் (4) அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எலபிரிய நந்தராஜ், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எல்லை குறித்து மீள் நிர்ணயிக்கும் போது, அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதன் காரணமாக, சிவனொளிபாதமலை பிரிவுபட்டிருப்பதாக அவர் தமது அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக, பௌத்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவரது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால், செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வெளிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அம்பகமுவ பிரதேசசபைக்கான தேர்தலை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட 8 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .