2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் பிரதேசம் வழமைக்குத் திரும்பியது

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கடந்த நான்கு நாள்களாக முடக்கப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசம், இன்று (31) வழமைக்குத் திரும்பியது.

ஹட்டன் நகரின் மீன் சந்தைப்பகுதி, சைட் வீதியின் நுழைவாயில் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள், வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து ஹட்டன் மார்கட் பகுதி, 14 நாள்களுக்கு முடக்கப்பட்டது. 

அத்துடன், குறித்த நபருடன் தொடர்புடைய 10 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைமூலம் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து குறித்த 10 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அவரகளுடன் தொடர்புடைய 400 பேர் வரையில் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 40 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைக்கப்பெற்றது.

இந்நிலையிலேயே,  ஹட்டன் டிக்கோயா சபைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு, பொதுசுகாதார பரிசோதகர்களும் ஹட்டன் - டிக்கோயா நகரசபையும் நடவடிக்கை எடுத்தது.

எனினும் ஹட்டன் மார்கட் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் திறப்பதற்கு முற்படுகையில் பொதுசுகாதார பரிசோதகரால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

எனினும் தொடர்ந்து மாரக்;கட் பகுதியை மூடுவதற்கு பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஏனைய வர்த்தக நிலையங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறப்பதற்கு அனுமதியளித்துள்ளனர்.

கொரோனா தொற்று மீண்டும் ஏற்படும் பட்சத்தில் ஹட்டன் - டிக்கோயா நகர வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனவும் பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X