2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹட்டனில் நீர்வெட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் நகரிலுள்ள பழைய குடிநீர்த் திட்டத்துக்குப் பதிலாக, புதிய நீர் குழாயை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், ஹட்டன் நகரின் சில இடங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஹட்டன் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக நாளை(9) மாலை 3 மணியிலிருந்து நள்ளிரவுவரை சைட் வீதி, சமனலகம, சுற்றுவட்டப்பாதை, சந்தைப் பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொன்னகர், கேம்ப்வெலி, வில்பிரட்புர, சாலியபுர, டிக்கோயா, அளுத்கல, மல்லியப்பு, டிம்புள்ள ஆகிய பிரதேசங்களுக்கும் மேலும் சில இடங்களுக்கும் இன்று (9) முதல் 12 ஆம் திகதிவரை, ஒரு நாள் அவசர நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நீர்க்குழாய் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, குறித்த காலப்பகுதியில் ஹட்டன்- சைட்வீதியில் வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைசெய்யப்படுமென, ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X