2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் கல்வி வலயத்தில் 8 பாடசாலைகள் தரமுயர்வு

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

ஹட்டன் கல்வி வலயத்தில், மாணவர்களின் இடைவிலகளைக் குறைக்கும் நோக்கிலும் உயர்க்கல்வி வசதிக்காகவும், தரம் 9 வரை வகுப்புகளைக் கொண்டிருந்த 8 பாடசாலைகள், தரம் 11 வரை தரம் உயர்த்தப்பட்டுள்ளனவென, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.  

மஸ்கெலியா ஸ்ரீமகள் கலாசார மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஹட்டன் கோட்டம் 3இல் வீழ்ச்சியடைந்திருந்த கல்வி நிலையை உயர்த்துவதற்கு, அங்கு பணிபுரிந்த கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், தன்னுடன் கைகோர்த்துச் செயற்பட்டார்களென்றும் எனினும், இதுவரை காலமும், தொழில் ரீதியாக மாணவர்களை ஏமாற்றி வந்தவர்களால், கசப்பான அனுபவங்களைஎதிர்கொள்ள நேரிட்டதென்றும் தெரிவித்தார்.  

தமது பிள்ளைகள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டும் சித்தியடைந்துவிட்டால் போதுமென்ற மனநிலையை பெற்றோர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய அவர், தரம் ஐந்துக்குப் பின்னர், உயர்க் கல்விக்கு மாணவர்களைத் தயார்படுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.   

பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் மட்டுமன்றி, ஒழுக்கம் உட்பட ஒவ்வொரு விடயத்திலும், பெற்றோர் அவதானிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   

மலையக மாணவர்கள், மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை பெருமைக்குரியதெனப் பாராட்டிய அவர், எதிர்காலத்தில், டிஜிட்டல் முறையில் இணையத்தளத்தினூடாகப் பரீட்சைக்குத் தோற்ற நேரிடுமென்றும் அதற்கான தயார்படுத்தல்கள் தற்போதே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X