2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் துர்நாற்றம்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.சிவா         

ஹட்டன் பிரதான பஸ்தரிப்பிடத்தில், அதிகளவு துர்நாற்றம் வீசிவருவதால், பயணிகள் பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் பஸ்தரிப்பிடத்தை அண்மித்து அமைந்துள்ள மலசலகூட கழிவுகள், வடிகானில் கலப்பதன் காரணமாகவே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் பயணிகள், இது தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் எவ்விதப் பயணும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

துர்நாற்றம் காரணமாக, மிக நீண்ட நேரமாக, பஸ்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அசெளகரியங்களுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, இவ்விடயம் தொடர்பில், ஹட்டன்-டிக்கோயா நகரசபை கவனம் செலுத்த வேண்டுமென்று, பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .