2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹட்டன் ரயில் நிலைய மலசலக்கூட கழிவு நீரால் மக்கள் ​அசௌகரியம்

Editorial   / 2019 மார்ச் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் ரயில் நிலையத்திலுள்ள மலசலக்கூட கழிவு நீரானது மக்கள் பயன்படுத்தும் வீதியூடாக கசிவதால், பல சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் பிரதேசவாசிகளும் ரயில் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

குறித்த கழிவுநீர் ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் மேம்பாலத்துக்கு செல்லும் வீதியிலேயே கசிந்துச் செல்கின்றது.

குறித்த வீதியானது பிரதான தபால் நிலையம், பொலிஸ் நிலையம், பிரதான இரண்டு பாடவாலைகளுக்குச் செல்லும் குறுக்கு வீதியாகவும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், குறித்த மலசல நீர் கசிவால் பல அசௌகரியங்களுக்கு பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகங்கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவரிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைத்துள்ளதெனவும் இந்த கழிவு நீர் கட்டமைப்பை சீரமைக்கும்படி ரயில்வே கட்டட பராமரிப்பு பிரிவுக்கு அறிவித்துள்ள போதிலும் இதற்கு இதுவரை உரிய பதில் எதுவும் கிடைவில்லையென அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .