2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹட்டன் வலய மேலதிக ஆசிரியர் இடமாற்றம் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்  

 

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட  மேலதிக ஆசிரியர்களின் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன், ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் என்.டி.எஸ்.நாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை,  ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் நேற்று (1) இடம்பெற்றது.

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை சார்பில், வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.செல்வராஜ் ஆகியோரும் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம், ஸ்ரீ லங்கா சுதந்திர ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி, ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் அவற்றின் பொதுச் செயலாளர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இதுவரை வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை மீள்பரிசீலனை செய்வதெனவும் இடமாற்றக் கடிதம் கிடைத்தும் கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக, எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செயற்பாடுகள் குறித்து, தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பிறகு, இடமாற்ற சபை கூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .