2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அளுத்கமவிலும் பாணந்துறையிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார், துசித்த குமார டீ சில்வா

டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 2ஆம் கட்ட நடவடிக்கை, அளுத்கமவிலும் பாணந்துறையிலும் இன்று (23) நடைபெற்றது. 

சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில், முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் பங்களிப்புடன், இந்த டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல், அமைச்சரின் பாரியார் டொக்டர் சுஜாதா சேனாரத்ன, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாப முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.எம். ரூமி உட்படப் பலரும், இதில் கலந்துகொண்டனர். 

இதேவேளை, டெங்கு ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், 1,190 படைவீரர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் கொழும்பு, கம்பஹா,களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள், வைத்தியசாலைகள், பஸ்தரிப்பிடம், பாடசாலை வளாகங்கள், வியாபார நிலையங்கள், விகாரைகள், பொது நிலையங்கள் என்பன சுத்திகரிக்கப்பட்டன.

அத்துடன், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைகளின் காரணமாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .