2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையின் கீழ்  உள்ள, கொச்சிக்கடை பிரதேச சபை கட்டடத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த மருத்துவ நிலையத்துடன் கூடிய சிறுவர் தாய்சேய் சிகிச்சை நிலையத்தை, வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நேற்று  முன்தினம்(8) தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதிய இடவசதி இன்மையால், பழைய இடத்துக்கே சிகிச்சை நிலையத்தை  கொண்டு செல்லுமாறும், கொச்சிக்கடை தபால் நிலையம் அருகில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறுவர் வைத்திய  சிகிச்சை நிலையத்தை உடனடியாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறும்  வலியுறுத்தி, இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு, கொச்சிக்கடை 26  ஆம் கட்டை அருகில்  கொண்டு செல்லப்பட்டுள்ள  தற்காலிக வைத்திய நிலையம் இடவசதி குறைவானதாகும். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெறுகின்றனர் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் தெரிவித்தனர்.

அத்துடன், புதிய இடத்தில் வைத்திய சிகிச்சை நிலையம் அமைக்கப்படும் வரை, இதுவரை இயங்கி வந்த கொச்சிக்கடை பிரதேச சபை கட்டடத்துக்கு  வைத்திய சிகிச்சை நிலையம் மீண்டும் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .