2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இடையூறு விளைவித்தால் சட்டம் செயற்படும்’

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்படும் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக, உயர்ந்தபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், கொழும்பு நகரின் கழிவு வெளியேற்றலுக்கான பொறுப்பை, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று  (27) முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே, ஜனாதிபதி இவ்வாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்து, மேற்கண்ட பொறுப்பை மேல் மாகாண முதலமைச்சருக்கு ஒப்படைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .