2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பஹா பொலிஸாரால் வீடு கையளிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ், கம்பஹா பொலிஸார் வறிய குடும்பமொன்றுக்கு, 10 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான நிதியைச் செலவிட்டு, வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்ததுடன், வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர்.

ஹெட்டி ஆராச்சிகே ரத்நாயக்க என்பவரின் குடும்பத்துக்கே, உடுகம்பல, வீதியவத்தை பிரஜா  பொலிஸ் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க தனவந்தர்களின் உதவியோடு, உடுகம்பல பிரதேசத்தில் 10 பேர்ச் காணியில், இந்த வீடு நிர்மணிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளருக்கு வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித புஸ்லெல்ல, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீலால் பெரேரா, கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்ஸ்மன் பண்டார, குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணவர்தன, மினுவாங்கொடை பிரதேச செயலாளர் சுனந்தா குணதிலக்க, பிரஜா பொலிஸ் குழுவுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் ஜயந்த பிரேமசிறி,  சமுர்த்தி உத்தியோகத்தர் விமலா ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .