2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடிநீரில் அழுகிய நண்டுகள்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்ணம்

களுத்துறை மாவட்ட மக்களுக்கு, நீர்த்தாங்கிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் அசுத்தமடைந்துக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தமக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், அழுகிய நிலையில் நண்டுகள், நீர்வாழ் உயிரினங்கள் காணப்படுவதாகவும் இதனால், நீர் அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து கருத்துரைத்த, களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான பியல் நிஷந்த பெரேரா, மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தீர்வு வழங்க எதிர்பார்த்துள்ளதால், நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், நீரைப் பரிசோதனை செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துமாறு, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரித்தார்.

களுத்துறை மாவட்டத்தில், குழாய் நீர் உப்பு தன்மையுடன் காணப்படுவதால், மக்கள் நீண்டகாலமாக சுத்தமான குடிநீரைப் பெறுவதில், பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கு மாற்றுத் தீர்வாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பிரதேச செயலகம், நகர சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை என்பன இணைந்து, நீர்த் தாங்கிகள் மூலம் மக்களுக்கு குடிநீர்ரை விநியோகித்து வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் நீர், அசுத்தமடைந்துக் காணப்படுவதால், மக்கள்  குடிநீரைப் பெறுவதில், மேலும் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .