2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டமா அதிபருக்கு எதிராக மஹிந்த அணி பாயப்போகிறது

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமா அதிபருக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு அல்லது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிவிதுரு ஹெல உறுமயின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று (24) கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

“நாடாளுமன்றத்தில், கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பில், சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில், குழப்பகரமான நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த சட்டமூலம் தொடர்பில், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது.

"இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் கூட கேள்வி எழுப்பக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .