2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சு வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்துக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக,

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி  தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராக்களின் பதிவுகளை பெற்றுகொள்ள நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  தலைவர் லஹிரு வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில்,

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பொறுப்பை பொலிஸாரே ஏற்க வேண்டும்.

மாலபே தனியால் வைத்திய கலூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து, நேற்று  சுகாதார அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.

அங்கு பொலிஸாருடன் இணைந்து பலர் கூட்டு சேர்ந்து நடத்திய தாக்குதலினால்,  58 மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .