2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தல் தொடர்பிலான சட்டமூலம் : ‘விரைவில் விவாதத்துக்கு வரும்’

Niroshini   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில், வெகுவிரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதற்கு அடுத்து வரும் 75 நாட்களுக்குள், மேற்படித் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“இந்நிலையில், இச்சட்டமூலமானது வெகுவிரைவிலேயே நாடாளுமன்றுக்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.  

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், 

“இந்த விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன பேச்சு வார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.  

“மேலும், இது குறித்து ஏனைய கட்சிகளுடனும் கலந்தாலோசித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .