2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு பாடசாலையில் கிருமி நீக்க வேலைத்திட்டம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. எம்.இஸட்.ஷாஜஹான்

மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலுக்கமைய, மேல் மாகாண பாடசாலைகளில், கொவிட் 19 கிருமி தொற்று  நீக்கம் செய்யும்  வேலைத்திட்டம், இன்று (23)  நீர்கொழும்பு அல் -ஹிலால் மத்திய கல்லூரியில்  ஆரம்பமாகியது.

நீர்கொழும்பு பிராந்திய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டச்சி  நிகழ்வில் அதிதியாகக் கலந்து வேலைத்திட்டத்தை  ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரி அதிபர்  எம்.எஸ்.எம். ஸஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .