2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு பொலிஸாரால் உலர் உணவுப் பொருள்கள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தமது ஊர்களுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்கக சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் தற்காலிகமாக வேலைசெய்யும் ஊழியர்கள், அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு தொழில்களை செய்யும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு, உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு,  நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று (18) நடைபெற்றது.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நிகழ்வில்  கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட  ஊழியர்கள் சிலருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.

சீதுவை , கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளில் சிக்கியுள்ள ஊழியர்கள் சிலர் பஸ்களில் அழைத்து வரப்பட்டு, உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .