2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஜ்லிஸ் ஆரம்ப வைபவம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளி வாசலில், 126 வருட மனாகிபுஷ் ஷாதுலி மஜ்லிஸின் ஆரம்ப வைபவம், நாளை (03) மாலை, அஸர் தொழுகையைத் தொடர்ந்து, கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), எம்.எம்.எம். ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அஸ் ஸெய்யித் அலவி மௌலானா (முர்ஸி), ஆரம்ப மஜ்லிஸில் உரை நிகழ்த்துவார்.

பேராசிரியர் கலாநிதி எம்.எம். தீன் முஹம்மத் (அல்-அஸ்ஹரி) ஓகஸ்ட் 4ஆம் திகதியும், கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எஸ்.எம். இஸ்திகார் (பாரி) 5ஆம் திகதியும், முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி எம்.என்.எம். இக்ராம் (பாஸி) 6ஆம் திகதியும், மௌலவி எம்.எஸ்,எம். பாஸில் (அஷ்ரபி) 7ஆம் திகதியும், மௌலவி எம்.என்.எம். நிப்ராஸ் (ஸக்காபி - முப்தி) 8ஆம் திகதியும், மௌலவி எம்.என்.எம். முஹம்மத் (பாதிபி) 9ஆம் திகதியும், மௌலவி அஹமட் ஸூபி (மஹ்ழரி) 10ஆம் திகதியும், முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி) 11ஆம் திகதியும், கலீபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) 12ஆம் திகதி சனிக்கிழமையும், தமாம் மஜ்லிஸிலும்  உரையாற்றவுள்ளனர்.

ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஆத்மீக ஞானி இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (ரழி) அவர்களின் 844ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும், குத்புல் வுஜூத் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் முகம்மத் அஜ்வாத் அல் பாஸி ஷாதுலி (ரஹ்) அவர்களின் 219ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும், சீனன் கோட்டை பள்ளிச் சங்கம், இந்த மஜ்லிஸை ஏற்பாடு செய்துள்ளது.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ராமிஸ் ஏ. கபூர் உட்பட பள்ளிச் சங்க உறுப்பினர்கள், கலீபாக்கள், உலமாக்கள், நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த இஹ்வான்கள் ஆகியோர், மஜ்லிஸில் பங்குபற்றுவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X