2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வௌ்ளம், மண்சரிவு அபாயம்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக, இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் அறிவித்துள்ளது.

தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம், குறிப்பிட்டளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் பல நாட்களுக்கு மழை இடைவிடாது பெய்தால், கம்பஹா மாவட்டத்தின் பூகொடை, மல்வான, பியகம, களனி, பேலியகொடை, வத்தளை, கொட்டுகொடை, ஓபாத்த, மினுவாங்கொடை, கம்பஹா போன்ற பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக, கம்பஹா அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த சந்திரசிறி தெரிவித்தார்.

மீரிகம, திவுலப்பிட்டிய, கிம்புலாப்பிட்டிய, கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதால், இப்பகுதி மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனர்த்தம் ஏற்படும் அறிகுறிகள் தென்படுமிடத்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .