2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘14 மாதங்கள் பால் வியாபாரம் செய்தேன்’

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“யாழ்கோவின் பால் கொள்வனவு விலையை 72 ரூபாயாக அதிகரிகரிக்க வேண்டும்” என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

இதன்போது, “யாழ்கோவின் பால் கொள்வனவு விலையை 72 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் வெளியிடங்களிலிருந்து வருகை தந்து வடமாகாணத்தில் பால் கொள்வனவு செய்வதைத் தடுக்கும் நோக்குடனும் பாலின் கொள்வனவு விலை அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளை, விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த தேவையில்லை” என சிவஞானம் தெரிவித்தார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், “பாலைக் கொள்வனவு செய்யும்போது பாலின் அடர்த்தி பரிசோதிக்கப்பட வேண்டும். பாலின் அடர்த்தி தரமாக இருக்கும்போது 72 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும்” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த சிவஞானம், “நான் பாடசாலைக் கல்வி முடிவடைந்த பின் 14 மாதங்கள் பால் வியாபாரம் செய்தேன். அக்காலத்திலேயே பாலின் அடர்த்தியை பரிசோதிக்க அளவுக் கருவிகள் வைத்திருந்தார்கள். பரிசோதனை செய்தே பாலைப் பெற்றுக்கொண்டனர். பாலில் தரத்தைப் பரிசோதனை செய்வது, பால் கொள்வனவு நிலைய முகாமையாளர்களின் வேலை” எனத் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .