2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

155 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், ரொமேஸ் மதுசங்க

மிகச் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 155 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை, காங்கேசன்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து, இன்று (20) அதிகாலை 1 மணியளவில், காங்கேசன்துறை வடக்கு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில், ​ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றில் நீர் உட்புகாத வண்ணம், நீல நிற பொலித்தீன் உரையினால் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், அவ்வாறு பொதி செய்யப்பட்ட 28 பொதிகள் கைப்பற்றப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர். 

வடக்கு கடல் மார்க்கம் ஊடாகக் கடத்தப்படவிருந்த மேற்படி போதைப்பொருட்கள், கடற்படையினரின் ரோந்துப் பணியை அவதானித்த நிலையில், கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 23.25 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .