2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

623 ஹெக்டெயாரில் நிலக்கடலைச் செய்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில், இவ்வாண்டு நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், 623 ஹெக்டெயார் நிலப்பரப்பில், நிலக்கடலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், நிலக்கடலைச் செய்கையை  ஊக்குவிக்கும் வகையில், 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், முள்ளியவளை, குமுழமுனை, முத்தையன்கட்டு, உடையார்கட்டு, ஒலுமடு ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, குறித்த நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு, 970 ஹெக்டெயார் நிலப்பரப்பில் நிலக்கடலைச் செய்கை எதிர்ப்பார்க்கப்பட்ட போதும், 623 ஹெக்டெயாரில் மாத்திரமே, செய்கை பண்ணப்பட்டுள்ளது என்று, மாவட்டப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, 2,404 ஹெக்டெயார் நிலப்பரப்பில் மேட்டுநில மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், 842 ஹெக்டெயார் நிலப்பரப்பில் மாத்திரமே இவ்வாண்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அலுவலகம் குறிப்பிட்டது.

முல்லைத்தீவு - மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதுடன், இவ்வாறான பகுதிகளில் வாழும் மக்கள், பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .