2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

947 இடங்களில் 672 டெங்குக்கு ஏதுவான சூழல்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதுக்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று (27) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, சுகாதார திணைக்களம், பொலிஸார், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதுக்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டன. அதனையடுத்து 17 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .