2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுற்றுலாதுறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சனச இண்டர் நஷனல்  நிறுவனம் கனடாவின் நிதி உதவியுடன், டி ஐ டி அமைப்பின் ஆலோசனையின் கீழ், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாதுறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் ஒன்றை இன்றைய தினம் (23) ஆரம்பித்து வைத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ளூர் சுற்றுலா துறையை  அபிவிருத்தி செய்யும் நோக்கில் “சுற்றுலா துறை அபிவிருத்தி வெகுமதி சங்கிலி” என்னும் செயற்றிட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு மாகாண  ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

மேலும்,  கொரோனாவுக்கு பின்னர் உணவகம் மற்றும் விடுதிகளின் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வும் இடம்பெற்றது.

அத்துடன் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான  கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  சனச இண்டர் நஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமடணி கிரிவந்டெனிய, சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஷ்மன் அபயசேகர, நிகழ்ச்சி திட்ட தலைவர் ஹர்ஷி அபேநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .