2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அச்சுறுத்திய இராணுவத்தினர், ​பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம்’

Editorial   / 2020 மே 18 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தமைக்காக எமது கட்சியையும் எமது உறுப்பினர்களையும் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்திய இராணுவத்தினர் மீதும் பொலிஸார் மீதும் தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ, அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து விட வேண்டுமென்று சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றனவென்றார்.

அத்துடன், “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பலரும் பல இடங்களில் நினைவு கூர்ந்தனர். எனினும், எமது கட்சியையும் எமது உறுப்பினர்களையும் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர். 

“எனவே, எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவத்தினர், பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம். மிக விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனவும் கஜேந்திரகுமார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .