2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அச்சுவேலி பொதுச்சந்தை பிரதேசசபை நிர்வாகத்துக்கு கைமாறியது

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி கிழக்கு பிரதேச சபையின் நிர்வகிப்பின் கீழ் உள்ள அச்சுவேலி பொதுச்சந்தையை, நேற்று  (01) முதல் பிரதேச சபை நேரடியாக எடுத்து நடத்துகின்றது.

கடந்த வருடம் சந்தையைப் பெற்ற குத்தகைக்காரர், மரக்கறி வியாபாரிகளிடம் இருந்து நாளாந்த வாடகையாக 300 ரூபாய் வசூலித்து வந்துள்ளனர். அதேபோன்று, மீன் வியாபாரிகளிடம் இருந்து 1 கிலோகிராமுக்கு 6 ரூபாய் என்ற ரீதியில் வசூலித்துள்ளார்.

இதனால், சந்தை வியாபாரிகள் பலர் நட்டம் காரணமாக, சந்தை வியாபாரத்தை கைவிட்டுச் சென்று வேறு தொழில் செய்து வருகின்றனர்.

இம்முறை பிரதேசசபையால் சந்தை குத்தகைக்குக் கேள்வி மனுப்பத்திரம் விடுக்கப்பட்டிருந்த போதும், அதனைப் பெறுவதற்கு யாரும் முன்வந்திருக்கவில்லை. மாறாக, மாட்டு இறைச்சி கடையும் கோழி இறைச்சி கடையுமே குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், அச்சுவேலி பொதுச்சந்தையை எடுத்து நடத்துவதற்கு, யாரும் முன்வராத காரணத்தால், நேரடியாக பிரதேசசபை நேற்று  (01) முதல் எடுத்து நடத்துகின்றது. இதையடுத்து, இம்முறை சந்தை வியாபாரிகளிடம் இருந்து நியாயமான முறையில் நாளாந்த வரிப்பணம் அறவீடு செய்வதாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில், சந்தையை எடுத்து நடத்தியவர்கள், சந்தை வியாபாரிகளை மோசமான முறையில் நடத்தியதுடன், நாளாந்த இட வாடகையாக ஒரு வியாபாரியிடம் இருந்து 300 ரூபாய் பணம் அறவிட்டிருந்தனர். இதனால், மீன் வியாபாரிகள் பலர் தொழிலை விட்டுச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X