2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா, எம்.றொசாந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (13) கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் காலை (13) 8 மணிமுதல் சுமார் 30 நிமிடங்கள் கறுப்புப் பட்டி அணிந்து, மௌன போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்ற வேண்டும். மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், பாடசாலை நிறைவடையும் வரை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது கடமைகளை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .