2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சால், வட மாகாணத்துக்குட்பட்ட காரைநகர் இந்துக்கல்லூரி (தீவகவலயம்) மன்னார் கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம் (மடுவலயம்) வவுனியா விபுலானந்தாக் கல்லூரி (வவுனியா தெற்கு வலயம்) வவுனியா  ஓமந்தை மத்திய கல்லூரி (வவுனியா வடக்கு வலயம் )ஆகிய  பாடசாலைகளுக்கான அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 மற்றும் வகுப்பு 2ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக்கல்வி அலுவலகங்களில் விண்ணப்படிவங்களைப் பெற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன், ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர், செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். 

விண்ணபதாரி ஆகக் குறைந்தது 3 வருட காலமேனும் சேவையாற்றக் கூடிய வயதெல்லை உடையவராக இருத்தல் வேண்டும். இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த விண்ணபதாரி தற்போது கடமையாற்றும் பாடசாலையில் 3 வருட சேவையை முழுமையாக நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

பொருத்தமான அதிபர் தரத்தையுடைய பாடசாலை சேவை நிலையமாகக் கொண்டிராதவர்களுக்கு இது பொருத்தமற்றது. அதேபோல், பிரதி அதிபராக, பகுதித் தலைவராக மற்றும் பொறுப்புகள் வழங்கப்படாதுள்ள இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருத்தமற்றது.

இலங்கை அதிபர் சேவை 1இல் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் இலங்கை அதிபர் சேவை 2ஐச் சேர்ந்தவர்களிலும் தெரிவு மேற்கொள்ளப்படும். கல்வி அமைச்சின் நேர்முகத்தேர்வுச் சபையால் நேர்முகப் பரீட்சை புள்ளிகள் அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்பட்டு சேவை நிலையம் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .